ஜப்​பானில் ‘புஷ்பா குன்​ரின்’ ஆனது ‘புஷ்பா 2’

ஜப்​பானில் ‘புஷ்பா குன்​ரின்’ ஆனது ‘புஷ்பா 2’
Updated on
1 min read

அல்லு அர்​ஜுன், ராஷ்மிகா மந்​த​னா, பஹத் ஃபாசில் ஆகியோர் நடித்து வெளி​யான திரைப்​படம் ‘புஷ்பா 2: த ரூல்’. சுகு​மார் இயக்​கிய இப்​படத்​துக்கு தேவிஸ்ரீ பிர​சாத் இசையமைத்​துள்​ளார்.

தெலுங்​கில் உரு​வான இந்​தப் ​படம் தமிழ், இந்​தி, மலை​யாள மொழிகளி​லும் வரவேற்​பைப் பெற்​றது. வசூலிலும் சாதனைப் படைத்​தது. இந்​நிலை​யில் ‘புஷ்பா 2: த ரூல்’ திரைப்​படம் ஜப்​பானில் நாளை (ஜன.16) வெளி​யாகிறது. இப்​படத்​தின் தொடக்​கக் காட்சி ஜப்​பானில் நடை​பெறு​வது போல அமைக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

அங்கு இப்​படத்​துக்கு ‘புஷ்பா குன்​ரின்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதன் ஜப்​பானிய மொழி டிரெய்​லர் ஏற்​கெனவே வரவேற்​பைப் பெற்ற நிலை​யில் இந்​தப் படத்​தின் விளம்​பரத்​துக்​காக அல்லு அர்​ஜுன் தனது குடும்​பத்​துடன் அங்கு சென்​றுள்​ளார். இப்​படத்தை கீக் பிக்​சர்​ஸ், சோசிகு நிறு​வனங்​கள் அங்கு சுமார் 250 திரையரங்​கு களில் வெளி​யிடு​கின்​றன.

ஜப்​பானில் ‘புஷ்பா குன்​ரின்’ ஆனது ‘புஷ்பா 2’
Eko Climax Explained: என்ன ஆனார் குரியச்சன்? | ஓடிடி திரை அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in