‘பள்ளிச்சட்டம்பி’ உண்மைச் சம்பவம் அல்ல: டொவினோ தாமஸ்

‘பள்ளிச்சட்டம்பி’ உண்மைச் சம்பவம் அல்ல: டொவினோ தாமஸ்
Updated on
1 min read

’பள்ளிச்சட்டம்பி’ படத்தின் கதை உண்மைச் சம்பவம் அல்ல என்று டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.

வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பள்ளிச்சட்டம்பி’. ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகியுள்ள படத்தினை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். இதில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜய ராகவன், பாபுராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் டொவினோ தாமஸ் பேசும் போது, “இப்படத்தின் கதையை 2018 ஆம் ஆண்டில் விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025-ம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம்.

அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது. நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை.

திட்டமிடலும் தேவை. இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும். இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.

‘பள்ளிச்சட்டம்பி’ உண்மைச் சம்பவம் அல்ல: டொவினோ தாமஸ்
விமானி சாய் ரோஷன் ஷாமை மணந்தார் நடிகை ஜனனி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in