

ஜெயசூர்யா, ரித்திகா சிங் நடிக்கும் பான் -இந்தியா திரைப்படம் ‘ஆபரேஷன் டிரால்’. இதில் முரளி ஷர்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் காவ்யா ஷெட்டி, ஆன்சன் பால், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, வினய் ராய், சித்திக், சாய் குமார், சிராஜுதீன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். நஜோஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜாபி ஜார்ஜ் தாடதில் தயாரிக்கும் இப்படத்தை ரதீஷ் வேகா கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
“உளவுத்துறை நடவடிக்கைகளைப் பின்னணியாகக் கொண்ட இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படம் இது. ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலைத் தழுவி உருவாகியுள்ள இப்படம், ஆக் ஷன், உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றைப் பேசுகிறது” என படக்குழு தெரிவித்துள்ளது.