‘சினிமாவில் எதையும் கணிக்க முடியாது’ - துல்கர் சல்மான்

‘சினிமாவில் எதையும் கணிக்க முடியாது’ - துல்கர் சல்மான்
Updated on: 
1 min read

துல்கர் சல்மான், சாத்​விகா வீரவள்ளி, ஸ்ருதிஹாசன் உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற தெலுங்கு திரைப்​படம், தமிழில் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ எனும் பெயரில் நவ.20-ல் வெளியாகிறது. விண்​வெளிக்​குச் செல்ல ஆசைப்​படும் பெண்ணின் கதையாக உருவாகியுள்ள இதை பவன் சதினேனி இயக்கியுள்​ளார்.

இதன் செய்​தி​யாளர்​ சந்​திப்பு சென்​னை​யில் நேற்று நடந்​தது. இசை அமைப்​பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்​பாளர் அல்லு அர​விந்த் உள்​பட படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

நடிகர் துல்​கர் சல்​மான் கூறும்​ போது, “இது தெலுங்​குப் படமும் அல்ல, தமிழ் படமும் அல்ல; நாட்​டின் எந்​தவொரு சிறு நகரத்​திலும் நடக்​கக்​கூடிய இந்​தி​யக் கதை. இது சினிமா மீதான உண்​மையான காதலாலும் ஆர்​வத்​தா​லும் உரு​வாக்​கப்​பட்ட நேர்​மையான படம். இப்​படத்​தின் டீஸர் வெளியானபோது எனக்கு வந்த செய்​தி​களும் தொலைபேசி அழைப்​பு​களும் நாங்​கள் ஏதோ பெரிய நட்​சத்​திரங்​களு​டன் பெரிய கமர்​ஷியல் படத்தை எடுத்​தது போன்ற உணர்​வைத் தந்​தன.

அது​தான் சினிமாவின் மாயம். எதையுமே நம்​மால் முன்பே கணிக்க முடி​யாது. நாம் செய்​யக் கூடியதெல்​லாம் கதையை ஆர்வத்​துடனும் காதலுடனும் சொல்​வதும் அதை மக்​கள் புரிந்​து​கொண்டு அரவணைப்​பார்​கள் என்று நம்​புவதுமே. இந்​தப் படத்தை எங்​கள் மகள்​கள், சகோ​தரி​கள் மற்​றும் மனைவிகளுக்காக உரு​வாக்​கி​யுள்​ளோம்” என்​றார்.

‘சினிமாவில் எதையும் கணிக்க முடியாது’ - துல்கர் சல்மான்
ஹார்முஸ் ஜலசந்தி​யில் எல்பிஜி கப்பல் மீது தாக்குதல்: 2 இந்திய மாலுமிகள் காயம்; ஒரு​வர் மாயம்

X