சல்மான்கானுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

சல்மான்கானுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்
Updated on
1 min read

சல்மான்கான் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சல்மான்கான் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை இயக்கவுள்ளார் வம்சி. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது படக்குழு. சல்மான்கான் – நயன்தாரா இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

தில் ராஜு தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவுள்ளது. சல்மான்கான், நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பூஜையினை பிரம்மாண்டமாக நடத்தி படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்துக்குப் பிறகு வம்சி இயக்கும் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தின் திரைக்கதைக்காக நீண்ட மாதங்கள் எடுத்து பணிபுரிந்துள்ளார் வம்சி. இந்தாண்டுக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

சல்மான்கானுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்
சென்னையில் வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.200 உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in