

நானி நடித்துள்ள அதிரடியான ஆக் ஷன் திரைப்படம், ‘த பாரடைஸ்’. இதில் மோகன் பாபு, கயாது லோஹர், இந்தி நடிகர் ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் டீஸரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இதில் ஆக்ரோஷமான பழங்குடியினத் தலைவர் ஜடால் என்ற கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார்.
“இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உணர்ச்சியின் ஆழத்தையும், பிரம்மாண்டத்தையும் பார்க்க முடியும். அதற்காகப் படக்குழு கடுமையாக உழைத்துள்ளது. செப். 24-ல் வெளியாகிறது” என படக்குழு அறிவித்துள்ளது.