“என் மனம் நன்​றி​யால் நிரம்பி இருக்​கிறது” - நடிகர் சுதீப் உருக்கம்

“என் மனம் நன்​றி​யால் நிரம்பி இருக்​கிறது” - நடிகர் சுதீப் உருக்கம்
Updated on
1 min read

பிரபல கன்னட நடிக​ரான சுதீப், தமிழில் புலி, முடிஞ்சா இவன புடி உள்​ளிட்ட படங்​களில் நடித்​துள்ளார். நான் ஈ படம் மூலம் பான் இந்​தியா நடிக​ரான அவர் நடித்து மேக்ஸ், மார்க் ஆகிய படங்​கள் தமிழிலும் வரவேற்​பைப் பெற்​றன.

இந்​நிலை​யில் அவர் சினி​மாவுக்கு வந்து 30 ஆண்டு ஆனதை அடுத்து ரசிகர்​கள், திரை​யுல​கினருக்கு நன்றி தெரி​வித்​துள்​ளார். இதுபற்றி அவர் வெளி​யிட்​டுள்ள பதிவில், “இந்த அழகான, திரைப்பட உலகில் மூன்று தசாப்​தங்​கள் கடந்​துள்ள இந்​நேரத்​தில், என் மனம் நன்​றி​யால் நிரம்பி இருக்​கிறது.

கனவு​களும் சந்​தேகங்​களும் கொண்ட ஒரு சிறு​வ​னாகத் தொடங்​கிய இப்​பயணம் இன்று இங்கு வந்து நிற்​கிறது. இதற்கு காரணம் ரசிகர்​களின் அன்​பும் ஆதர​வும் தான். நீங்​கள் தான் என் பலம், என் ஊக்​கம், தொடர்ந்து பணியாற்​று​வதற்​கான காரண​மும் நீங்​கள்​தான்.

தங்​கள் கதைகளில் என்னை நம்பி இணைத்​துக்​கொண்ட இயக்​குநர்​கள் மற்​றும் திரை எழுத்​தாளர்​களுக்​கும் தயாரிப்​பாளர்​களுக்​கும் நன்​றி”என்​றார். திரை​யுல​கில் 30 ஆண்​டு​களை கடந்த அவருக்கு திரை​யுல​கினர், ரசிகர்​கள் வாழ்த்​துகளைத் தெரி​வித்​து வரு​கின்​றனர்​.

“என் மனம் நன்​றி​யால் நிரம்பி இருக்​கிறது” - நடிகர் சுதீப் உருக்கம்
விவசாயத்தை ஊக்குவிக்க விஸ்தார் ஏஐ தொழில்நுட்பம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in