ஆஸ்கர் விருது போட்டியில் ‘மகாவதார் நரசிம்மா’

ஆஸ்கர் விருது போட்டியில் ‘மகாவதார் நரசிம்மா’

Published on

விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையுடன் உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. அஸ்வின் குமார் இயக்கிய இப்படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ், கிளீம் புரொடக் ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது.

5 மொழிகளில் வெளியான இப்படம், தெலுங்கு, இந்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரூ.15 கோடியில் உருவான இந்தப் படம், உலகம் முழுவதும் ரூ.310 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில் இந்தப் படம், சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

2026-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான, சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில், பரிசீலனையில் உள்ள 35 படங்களின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அதில் ‘ஆர்கோ’, ‘எலியோ’, 'ஜூடோபியா 2', 'கே-பாப் டெமான் ஹன்டர்' உள்ளிட்ட படங்களுடன் ‘மகாவதார் நரசிம்மா’ போட்டியிடுகிறது.

ஆஸ்கர் விருது போட்டியில் ‘மகாவதார் நரசிம்மா’
வி.சாந்தாராம் ‘பயோபிக்’கில் இணைந்தார் தமன்னா!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in