மோசமான வதந்திகள்: கயாடு லோஹர் வருத்தம்

மோசமான வதந்திகள்: கயாடு லோஹர் வருத்தம்
Updated on
1 min read

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான கயாடு லோஹர் அடுத்து ‘இதயம் முரளி’, சிம்பு ஹீரோவாக நடிக்கும் படம் என நடித்து வருகிறார்.

‘டிராகன்’ படம் மூலம் கவனிக்கப்பட்ட அவரைப் பற்றி அவதூறு செய்திகளும் அதிகமாகப் பரவத் தொடங்கின. இவர் ரூ.35 லட்சம் வாங்கிக் கொண்டு பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார் என்று வதந்தி பரவியது. இந்நிலையில் இத்தகவல்கள் தன்னை அதிகம் பாதித்ததாக கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “வெளிப்படையாகச் சொன்னால் இதுபோன்ற சூழலைச் சமாளிப்பது எளிதான விஷயமல்ல. நான் சினிமா பின்னணியிலிருந்து வரவில்லை. அதனால் இதை எப்படிச் சமாளிப்பது என்றும் தெரியவில்லை. இது போன்ற செய்திகள் என் தூக்கத்தைக் கெடுக்கின்றன.

யாரோ பரப்பும் வதந்திகள் நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வார்களா? என்று தெரியவில்லை. மற்றவர்கள் மீது அக்கறை கொள்கிற என்னைப் பற்றி இப்படி மோசமான வதந்திகள் பரப்பப்படுவது வேதனையாக இருக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in