பீரியட் படத்​தில் நடிக்கும் கயாது லோஹர்!

பீரியட் படத்​தில் நடிக்கும் கயாது லோஹர்!
Updated on
1 min read

டொவினோ தாமஸ், கயாது லோஹர் நடிக்​கும் படம் ‘பள்ளிச்​சட்​டம்​பி’. டிஜோ ஜோஸ் ஆண்​டனி இயக்​கி​யுள்ள இப்​படத்​தின் கதை 1950–60-களில் நடப்​பது போல அமைக்​கப்​பட்​டுள்​ளது.

வேர்ல்ட்​வைட் ஃபிலிம்ஸ் சார்​பில் நவுஃபல் மற்​றும் பிரிஜீஷ், சி க்யூப் ப்ரோஸ் என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் சார்​பில் சாணக்​கியா சைதன்யா சரண் ஆகியோர் தயாரிக்​கின்​றனர்.

மலை​யாளத்​தில் உரு​வாகும் இப்​படம் தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்னடம் என 5 மொழிகளில் ஏப்​.9-ம் தேதி வெளி​யாக உள்​ளது. ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்​கிறார். டிஜோ டோமி ஒளிப்​ப​திவு செய்கிறார்.

இப்​படத்​திலிருந்​து, ‘காட்டு செண்​பகம்’ என்ற பாடல் வெளி​யாகி இருக்​கிறது. தமிழ்ப் பதிப்​புக்கான பாடலை மோகன் ராஜன் எழு​தி​யுள்​ளார். அகில் ஜே சந்த், ஆவ்னி மல்​ஹர் பாடி​யுள்ள இப்​பாடல் வரவேற்​பைப் பெற்று வரு​கிறது. கயாது லோஹர், தமிழில் ‘டி​ராகன்’ படத்​தில் நடித்​ததன் மூலம் கவனிக்​கப்பட்​டார். ‘இத​யம் முரளி’ உள்பட சில தமிழ்ப் படங்​களில் நடித்து வருகிறார்​.

பீரியட் படத்​தில் நடிக்கும் கயாது லோஹர்!
‘ரா​மாயணம்’ ஹாலிவுட்​டில் தாக்​கத்தை ஏற்​படுத்​தும்: தயாரிப்​பாளர் நம்​பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in