‘தேவரா’ பாடலை ஏ.ஐ மூலம் அருவருப்பாக சித்தரிப்பதா? - ஜூனியர் என்.டி.ஆர் கடும் கண்டனம்

ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர்

Updated on: 
1 min read

ஜூனியர் என்​.டி.ஆர், ஜான்வி கபூர் நடிப்​பில் தெலுங்​கு, தமிழ் உள்பட5 மொழிகளில் வெளி​யான திரைப்​படம், ‘தேவ​ரா’. இதில் இடம்​பெற்ற ‘சுட்​டமல்​லி’ என்ற பாடல் காட்​சி​யில் இடம்​பெற்ற ஜான்வி கபூரை, செயற்கை நுண்​ணறிவு மூலம் தவறாக எடிட் செய்து இணை​யதளங்​களில் பரப்​பியதற்கு ஜூனியர் என்​.டி.ஆர் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர், “ஏ.ஐ தொழில்​நுட்​பத்​தைத் தவறாகப் பயன்படுத்தி உரு​வாக்​கப் பட்​டுள்ள இந்த வீடியோ அருவருப்பானது, வக்​கிர​மானது மற்​றும் வெட்​கக்கே​டானது. பெண்​களைத் தாயாக​வும் தெய்​வ​மாக​வும் போற்​றும் தேசம் இது; தாயே தெய்​வம் என்​பது வெறும் வாசகம் மட்​டுமல்ல, நம் கலாச்​சா​ரத்​தின் ஒரு பகு​தி. அப்​படிப்​பட்ட சூழலில், ஒரு பெண்ணை மிக​வும் இழி​வான முறை​யில் அவம​திக்​கச் சிலர் செயற்கை நுண்ணறிவைப் பயன்​படுத்​தும் அளவுக்​குத் தரம் தாழ்ந்து போயுள்​ளனர்.

இவ்​வளவு மோச​மான ஒன்றை உரு​வாக்க ஏ.ஐ-யை பயன்படுத்துவது வெட்​கக்​கே​டானது. இதை உரு​வாக்​கிய யாரையும் சும்மா விட​மாட்​டேன். அவர்​கள் மீது அனைத்து சட்ட நடவடிக்​கைகளை​யும் எடுப்​பேன். தயவுசெய்து இது​போன்ற உள்ளடக்​கத்​தைப் பார்க்​கவோ, பகிரவோ வேண்​டாம்.

இன்று இதுவேறொரு​வருக்கு நடக்​கலாம்; நாளை இது உங்​கள் தாய், சகோ​தரி, மனைவி அல்​லது மகளுக்​குக்​கூட நடக்​கலாம். இது ஒரு தீவிர​மான பிரச்​சினை. ஏ.ஐ-​யின் தவறான பயன்​பாட்​டுக்கு எதிராகக் கடுமை​யான விதி​முறை​களைக் கொண்டு வரு​மாறும், உறு​தி​யான நடவடிக்​கைகளை எடுக்​கு​மாறும் மாநில அரசுகளையும் இந்​திய அரசை​யும் வலி​யுறுத்​துகிறேன்” என்று கூறி​யுள்​ளார்​.

<div class="paragraphs"><p>ஜூனியர் என்.டி.ஆர்</p></div>
Dorothy: சாதி, ஆண் திமிர் வளர்த்த பாலின பாகுபாட்டை தகர்த்த டோரதி | திரை தேவதைகள் 38

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in