துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா?
Updated on
1 min read

துல்கர் சல்​மான் கதா​நாயக​னாக நடித்துள்ள படம், ‘ஐ அம் கேம்’. இதை ‘ஆர்​டிஎக்​ஸ்’ படத்தை இயக்​கிய நஹாஸ் ஹிதா​யத் இயக்​கி​யுள்​ளார்.

இதில் கயாது லோஹர், ஆண்​டனி வர்​கீஸ், மிஷ்கின், சம்​யுக்தா விஸ்​வ​நாதன் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். அதிரடி த்ரில்​லர் படமான இதற்கு ஜிம்ஷி காலித் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்​துள்​ளார்.

துல்​கர் சல்​மானின் 40-வது திரைப்​பட​மான இதை, அவருடைய வேஃபரர் பிலிம்ஸ் தயாரித்​துள்​ளது. பான் இந்​தியா முறை​யில் 5 மொழிகளில் உரு​வாகி​யுள்ள இப்​படம் ஓணம் பண்​டிகையை முன்​னிட்டு ஆக. 20-ல் வெளி​யாகும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால், போஸ்ட் புரொடக் ஷன் பணி​கள் இன்​னும் முடி​யாத​தால் ரிலீஸ் தள்​ளிப் போகிறது. இந்த மாதம் பிரம்​மாண்ட படங்​களான ‘டாக்​ஸிக்’, ‘விஸ்​வ​நாத்​ அண்ட்​ சன்​ஸ்​’ ஆகிய படங்​கள் வெளி​யாக இருப்​ப​தா​லும் ‘ஐ அம்​ கேம்​’ படத்தின் ரிலீஸ்​ தள்​ளி வைக்கப்படுவதாக கூறப்​படுகிறது.

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா?
Balan: The Boy - இந்து, மேரி, ஃபர்ஸானா... இன்னும் சில விக்டிம்கள் | திரை தேவதைகள் 30

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in