தள்​ளிப்​ போகிறது ‘த்​ரிஷ்​யம் 3’ ரிலீஸ்?

தள்​ளிப்​ போகிறது ‘த்​ரிஷ்​யம் 3’ ரிலீஸ்?
Updated on
1 min read

ஜீத்து ஜோசப் இயக்​கத்​தில் மோகன்​லால் நடித்து வெளி​யான ‘த்​ரிஷ்​யம்’, மலை​யாளம் மட்​டுமல்​லாமல் மற்ற மொழிகளி​லும் ரீமேக் செய்​யப்​பட்டு வெற்றி பெற்​றது. தனது குடும்​பத்தை காப்பாற்ற புத்​தி​சாலித்​தன​மான முடிவு​களை எடுக்​கும் ஜார்ஜ் குட்டி என்ற கதா​பாத்​திரத்​தில் மோகன்​லால் நடித்​திருந்​தார்.

இப்​படம் தமிழில், கமல்​ஹாசன் நடிப்​பில் பாப​நாசம் என்ற பெயரில் ரீமேக் செய்​யப்​பட்டு ஹிட்​டானது. இப்​படத்​தின் அடுத்த பாகம் நேரடி​யாக ஓடிடி-தளத்​தில் வெளி​யானது. இந்​நிலை​யில் இதன் 3-ம் பாகம் இப்​போது உரு​வாகி​யுள்​ளது. இதில் மோகன்​லாலுடன் மீனா, அன்​சிபா ஹசன், எஸ்​தர் அனில், ஆஷா சரத் ஆகியோர் நடித்​துள்​ளனர்.

ஆசீர்​வாத் சினி​மாஸ் சார்​பில் ஆண்​டனி பெரும்​பாவூர் தயாரித்துள்ள இப்​படம் ஏப். 2-ம் தேதி வெளி​யா​வ​தாக அறிவிக்கப்பட்​டிருந்​தது. தற்​போது வளை​குடா நாடு​களில் நிலவி வரும் பதற்​ற​மான சூழல் காரண​மாக, படத்​தின் வெளி​யீட்​டைத் தள்ளி வைக்​கப் படக்​குழு ஆலோ​சித்து வரு​வ​தாகத் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதுபற்​றிய அதி​காரப்​பூர்வ அறி​விப்பு விரைவில் வெளி​யாகும் என தெரி​கிறது.

தள்​ளிப்​ போகிறது ‘த்​ரிஷ்​யம் 3’ ரிலீஸ்?
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in