அட்லியின் ‘ராக்கா’வில் இந்தி நடிகர் ஷாருக்கான்?

அட்லியின் ‘ராக்கா’வில் இந்தி நடிகர் ஷாருக்கான்?
Updated on
1 min read

அட்லி இயக்​கத்​தில் அல்லு அர்​ஜுன் நடிக்​கும் சயின்ஸ் பிக் ஷன் படம் ‘ராக்​கா’. ஃபேன்​டஸி ஆக் ஷன் படமான இதை சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கிறது. தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்​கிறார்.

ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்​தனா உள்பட பலர் நடிக்​கின்​றனர். அல்லு அர்​ஜுனின் 42-வது பிறந்த நாளை முன்​னிட்டு இப்​படத்​தின் தலைப்​பை​யும் அவரது தோற்​றத்​தை​யும் படக்​குழு வெளியிட்டிருந்தது. அல்லு அர்​ஜுனின் வித்​தி​யாச​மான லுக் வரவேற்​பைப் பெற்றிருந்​தது. இந்​நிலை​யில், இதில் ஷாருக்​கான் கவுரவ வேடத்​தில் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

ரஜினி​யின் ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் இருந்து வில​கிய ஷாருக்​கான், இதில் நடிக்க இருக்​கிறார். அட்லி இயக்​கிய ‘ஜவான்’ படத்​தில் ஷாருக்​கான் நடித்​திருந்​தார். அந்​தப் படம் ஆயிரம் கோடிக்​கும் மேல் வசூலித்​தது. அந்த நட்​பின் அடிப்​படை​யில் ‘ராக்​கா’ படத்​தில் அவர் கவுரவ வேடத்​தில் நடிக்க இருப்​ப​தாகத் தகவல் வெளியாகியுள்​ளது. இதுகுறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்பு வெளியாக இருக்​கிறது.

அட்லியின் ‘ராக்கா’வில் இந்தி நடிகர் ஷாருக்கான்?
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in