“சமூக வலைதள ட்ரோலிங்கால் அதி​கம் அழு​திருக்​கிறேன்” - நடிகை ஸ்ரீலீலா வருத்தம்

“சமூக வலைதள ட்ரோலிங்கால் அதி​கம் அழு​திருக்​கிறேன்” - நடிகை ஸ்ரீலீலா வருத்தம்
Updated on
1 min read

தமிழில் பராசக்தி படம் மூலம் அறி​முக​மான தெலுங்கு நடிகை​யான ஸ்ரீலீலா இந்​தி​யிலும் நடித்து வரு​கிறார். தற்போது தெலுங்​கில் அவர் நடித்​துள்ள படம் ‘உஸ்​தாத் பகத்சிங்’. பவன் கல்​யாண் ஹீரோ​வாக நடித்​துள்ள இதில் ராஷி கன்னா உள்பட பலர் நடித்​துள்ளனர்.

இப்​படத்​தின் புரமோஷனில் கலந்​து​கொண்ட ஸ்ரீலீலா, ராஷி கன்னாவிடம் சமூக வலைதள ட்ரோலிங் பற்றி கேட்​கப்​பட்​டது. அதற்​குப் பதிலளித்த ஸ்ரீலீலா, கடுமை​யான விமர்​சனங்​கள் மற்​றும் ஆன்​லைன் ட்ரோலிங் காரண​மாகத் திரை​யுல​கையே விட்டு விலக நினைத்​த​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “திரைத்​துறைக்கு வந்த புதி​தில் ட்ரோல்​களை கண்டு அதி​கம் அழு​திருக்​கிறேன். இது நமக்​கான இடமாக இல்​லை, மீண்​டும் கல்​லூரிக்​குச் சென்​று​விடலா​மா? என்று கூட என் அம்​மா​விடம் கேட்​டிருக்​கிறேன்.

அப்​போது மென்​மை​யான சுபாவம் கொண்டவளாக, எளி​தில் உணர்ச்​சிவசப்​படக் கூடிய​வளாக இருந்​தேன். தற்​போது இது​போன்ற விமர்​சனங்​களை எதிர்​கொள்​ளப் பழகி​விட்​டேன். தேவையற்ற எதிர்​மறை​யான விஷ​யங்​களை மக்​களும் நம்​புவ​தில்​லை” என்றார்.

ட்ரோலிங் பாதிப்பு பற்றி நடிகை ராஷி கன்னா கூறும்​போது, “தற்​போதைய சூழலில் ட்ரோலிங், முன்பை விட மோச​மாகி​விட்​டது. வியூஸுக்​காக பலர் கண்​டபடி எழுதுகிறார்​கள். தங்​கள் சுயநலத்​துக்​காகப் பொய்​யான செய்​தி​களைப் பரப்​பு​கிறார்​கள்.

ஒரு​வரின் பின்​னணி​யைப் புரிந்​து​கொள்​ளாமல், மேலோட்​ட​மாகத் தீர்ப்பு வழங்​கு​வது வருத்​தமளிக்​கிறது. இது​போன்ற ட்ரோலிங்​கால் நீண்ட காலம் கஷ்டப்​பட்டு உரு​வாக்​கிய நற்​பெயர், கெட்​டு​விடுமோ என்ற பயம் இருக்​கிறது” என்​று தெரி​வித்​துள்ளார்.

“சமூக வலைதள ட்ரோலிங்கால் அதி​கம் அழு​திருக்​கிறேன்” - நடிகை ஸ்ரீலீலா வருத்தம்
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in