வைஷ்​ணவ் தேஜ் நடிப்பில் ‘ஹனுமேன் 2’

வைஷ்​ணவ் தேஜ் நடிப்பில் ‘ஹனுமேன் 2’
Updated on: 
1 min read

பிரசாந்த் வர்மா இயக்​கத்​தில், தேஜா சஜ்ஜா நாயக​னாக நடித்து வரவேற்​பைப் பெற்ற திரைப்​படம் ‘ஹனுமேன்’. சூப்​பர் ஹீரோ ஜானரில் உரு​வான இந்​தப் படத்தை பிரைம்ஷோ என்​டர்​டெயின்​மென்ட் சார்​பில் கே.நிரஞ்​சன் ரெட்டி – சைதன்யா ரெட்டி தயாரித்தனர். இப்​போது இந்​நிறு​வனம் அடுத்த படத்தை அறிவித்துள்​ளது.

முதல் பாகத்​தில் நடித்த தேஜா சஜ்ஜா மாற்​றப்​பட்டு, பஞ்சா வைஷ்ணவ் தேஜ் முக்​கிய கதாபாத்​திரத்​தில் நடிப்​ப​தாக அறிவிக்கப்​பட்​டுள்​ளது. இப்​படத்​துக்கு ‘ஹனு-மேன் 2: தி ரைஸ் ஆஃப் வான​ராஸ்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். பிரம்மாண்டமான கற்​பனைப் பொழுதுபோக்​குத் திரைப்​பட​மாக உரு​வாகும் இது, புராணங்​கள் மற்​றும் அசாதா​ரண​மான புதிய உல​கத்​துக்​கான கதவு​களைத் திறக்​கும் என தெரி​வித்​துள்ள படக்குழு, இதன் டைட்​டில் போஸ்டரை வெளி​யிட்​டுள்​ளது.

இப்​படத்தை விஐ.ஆனந்த் எழுதி இயக்​கு​கிறார். இவர் தமி​ழில், ‘அப்புச்சி கிராமம்’ படத்தை இயக்​கி​யுள்​ளார். இதில் நடிக்​கும் மற்ற நடிகர்​கள் மற்​றும் தொழில்​நுட்​பக் கலைஞர்​கள் குறித்த விவரங்​கள் விரைவில் வெளி​யிடப்​பட இருக்​கிறது. ‘ஹனு- மேன்’ படத்தை இயக்​கிய பிரசாந்த் வர்மா தனது சினிமாடிக் யுனிவர்ஸின் கீழ், ரிஷப் ஷெட்டி நடிக்​கும் ‘ஜெய் ஹனுமான்’ படத்தை இயக்கி வருவது குறிப்​பிடத்​தக்​கது.

வைஷ்​ணவ் தேஜ் நடிப்பில் ‘ஹனுமேன் 2’
ஓ.ம்: விமர்சனம் - நடிப்பு அரக்கர்களும், ஆன்மா இல்லாத ஸ்பை த்ரில்லரும்!

X