100 இடங்​களில் படமான துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’

100 இடங்​களில் படமான துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’
Updated on
1 min read

துல்கர் சல்மான் நடிக்​கும் ‘ஐ அம் கேம்’ படத்தை ‘ஆர்டிஎக்ஸ்’ நஹாஸ் ஹிதாயத் இயக்​கி​யுள்​ளார். இதில் கயாது லோஹர், ஆண்டனி வர்​கீஸ், மிஷ்கின், சம்​யுக்தா விஸ்​வ​நாதன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். அதிரடி த்ரில்லர் படமான இதற்கு ஜிம்ஷி காலித் ஒளிப்​ப​திவு செய்​கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்​கிறார்.

துல்​கர் சல்​மானின் 40-வது திரைப்​பட​மான இதை, அவருடைய வேஃபரர் பிலிம்ஸ் மெகா பட்​ஜெட்​டில் தயாரித்​துள்​ளது. இப்​படத்​தின் டிரெய்​லர் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்று வரு​கிறது. இது​வரை இல்​லாத அளவுக்கு அதிரடி நிறைந்த, ஸ்டைலான கதாபாத்திரத்தில் துல்​கர் சல்​மான் வரு​கிறார்.

சூதாட்​டம், பழி​வாங்​குதல், குற்ற உலகம் மற்​றும் பரபரப்​பான ஆக் ஷன் காட்​சிகள் நிறைந்த டிரெய்​லர், கவனத்தை ஈர்த்​துள்​ளது. 100-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் படமாக்​கப்​பட்​டுள்ள இப்​படம், தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்தி மொழிகளில் ஆக.20-ல் வெளி​யாக​வுள்​ளது.

100 இடங்​களில் படமான துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’
‘ஐ அம் கேம்’ ட்ரெய்லர் எப்படி? - துல்கர் மீண்டும் அதிரடி ‘ஆட்டம்’!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in