டீஸரை மட்டும் பார்த்துவிட்டு முடிவெடுக்காதீர்கள்: ‘டாக்ஸிக்’ விவகாரத்தில் ஜெயமாலா கருத்து

டீஸரை மட்டும் பார்த்துவிட்டு முடிவெடுக்காதீர்கள்: ‘டாக்ஸிக்’ விவகாரத்தில் ஜெயமாலா கருத்து
Updated on
1 min read

யாஷ் ஹீரோவாக நடிக்கும் ‘த டாக்ஸிக்’ படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் என பலர் நடித்துள்ளனர். கன்னடம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் டீஸருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தன. அதில் ஆபாசமான காட்சிகள் இருப்பதாகக் கூறி கர்நாடக மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. கர்நாடக கிறிஸ்தவ அமைப்புகளும் புகார் கூறியுள்ளன.

டீஸரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், கிறிஸ்தவ மதத்தை அவமதிப்பதாகவும், கிறிஸ்தவர்களின் மன உணர்வைப் புண்படுத்துவதாகவும் கூறி எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, தலைமைச் செயலர், உள்துறை அமைச்சர் மற்றும் தணிக்கைவாரியத்திடம் புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து, திரைப்பட வர்த்தக சபைத் தலைவரும் நடிகையுமான ஜெயமாலா கூறும்போது, “டாக்ஸிக் டீஸர் குறித்து புகார்கள் வந்துள்ளன. ஆனால் சரியாக என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை. பார்வையாளர்களை திரையரங்குக்கு ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறிய பகுதி மட்டுமே டீஸர். தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் அளிக்காத நிலையில்

படத்தைப் பற்றி முன்கூட்டியே விவாதிப்பது சரியானதல்ல. தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கான முதலீடு செய்திருக்கிறார்கள். அதனால் முழு படத்தையும் பார்த்துவிட்டுப் பிறகு கருத்துச் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

டீஸரை மட்டும் பார்த்துவிட்டு முடிவெடுக்காதீர்கள்: ‘டாக்ஸிக்’ விவகாரத்தில் ஜெயமாலா கருத்து
வரலட்சுமி இயக்குநராகும் ‘சரஸ்வதி’ முதல் தோற்றம் வெளியீடு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in