இயக்குனர் சனல் குமார் சசிதரன் உண்ணாவிரத போராட்டம்

இயக்குனர் சனல் குமார் சசிதரன் உண்ணாவிரத போராட்டம்
Updated on
1 min read

மலை​யாள இயக்​குந​ரான சனல் குமார் சசிதரன், ‘செக்ஸி துர்​கா’ உள்​ளிட்ட படங்​களின் மூலம் கவனம் பெற்​றார். இவர் மீது, கடந்த 2022-ம் ஆண்டு பிரபல நடிகை ஒரு​வர், பாலியல் தொல்லை புகார் கூறி​யிருந்​தார். இவ்​வழக்​கில் கைது செய்​யப்​பட்ட சனல்​குமார் சசிதரன், பின்​னர் ஜாமீனில் விடுவிக்​கப்பட்​டார்.

இந்​நிலை​யில் சமூக வலை​தளங்​களில் தனது பெயருக்​குக் களங்​கம் விளைக்​கும் வகை​யிலும் மிரட்​டும் வகை​யிலும் பதிவு​களை வெளி​யிட்டு வரு​வ​தாகக் கூறி அவர் மீது 2024-ம் ஆண்டு மீண்​டும் புகார் அளித்​தார் அந்த நடிகை. கொச்சி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் கேரள தலை​மைச் செயல​கம் முன்பு கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்​டத்தை சனல்​கு​மார் சசிதரன் தொடங்​கி​யுள்​ளார்.

தன் மீது நடிகை அளித்த புகாரின் அடிப்​படை​யில், பதிவு செய்யப்பட்ட வழக்​கு​களுக்​குப் பின்​னால் சதி இருப்​ப​தாகக் கூறும் எனது குற்​றச்​சாட்டு குறித்து விசா​ரணை நடத்த வேண்​டும்; ஹேமா கமிட்டி அறிக்​கையை முழு​மை​யாக வெளி​யிட வேண்டும்; அந்த அறிக்​கை​யில் கூறப்​படும் பாலியல் சுரண்​டல் தொடர்​பான குற்​றச்​சாட்​டு​கள் குறித்து உயர்​மட்ட விசா​ரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அவர் உண்​ணா​விரதம் மேற்​கொண்​டுள்​ளார்.

தனது கோரிக்​கைகள் தனிப்​பட்ட பிரச்​சினை​கள் அல்ல என்​றும், திரைப்​படத் துறையை​யும் சமூகத்​தை​யும் பாதிக்​கும் முக்​கிய​மான பிரச்​சினை​கள் என்​றும் சனல்​கு​மார் சசிதரன் கூறி​யுள்​ளார். தனக்​குக் கிடைத்த கேரள மாநில விருதுகளை​யும் வைத்​துக்​கொண்டு உண்​ணா​விரதத்​தில்​ ஈடு​பட்​டுள்​ளார்​.

இயக்குனர் சனல் குமார் சசிதரன் உண்ணாவிரத போராட்டம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியாக ராஷ்மிகா நடிக்கும் படத்துக்கு அனிருத் இசை!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in