2 பாக​மாக உரு​வாகிறதா அட்லியின் ‘ராக்​கா’?

2 பாக​மாக உரு​வாகிறதா அட்லியின் ‘ராக்​கா’?
Updated on
1 min read

அட்லி இயக்​கத்​தில் அல்லு அர்​ஜுன் கதா​நாயக​னாக நடிக்​கும் சயின்ஸ் பிக் ஷன் படம் ‘ராக்​கா’. சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இப்படம் ஆயிரம் கோடி ரூபாய் பட்​ஜெட்​டில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்​படு​கிறது.

இப்​படத்​தின் கதை, புராண வேத காலம் மற்​றும் இப்​போதைய காலம் என 2 வெவ்​வேறு காலக்​கட்​டங்​களி​ல் நடப்​ப​தாக அமைக்கப்​பட்​டுள்​ளது. நவீன காலக்​கட்​டத்​தில் மிருணாள் தாக்குர் முதன்மை பாத்​திரத்​தில் நடிக்​கிறார். புராண வேத காலகட்​டத்​தில் தீபிகா படு​கோன், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரும் நடிக்​கின்​றனர்.

இந்தி நடிகர் ஷாருக் கான் இப்​படத்​தில் கவுர​வத் தோற்​றத்​தில் நடிக்​க​வுள்​ளார். அவர் தொடர்​பான காட்​சிகளின் படப்​பிடிப்பு விரை​வில் வெளி​நாட்​டில் நடை​பெற இருக்​கிறது. இந்​நிலை​யில் இந்​தப் படம் 2 பாக​மாக உரு​வாகிறது என்​றும் ஒவ்​வொரு பாக​மும் ஒவ்​வொரு கால​கட்​டத்​தில் நடப்​பது போல உரு​வாகிறது என்​றும் கூறப்​படு​கிறது.

2 பாக​மாக உரு​வாகிறதா அட்லியின் ‘ராக்​கா’?
GARGI: ஒற்றைக் கேள்வியில் நியாயத் தீர்ப்பு எழுதிய கார்கி | திரை தேவதைகள் 28

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in