சமூக ஊடகங்களில் அவதூறு: போலீஸில் அனசுயா பரத்வாஜ் புகார்

சமூக ஊடகங்களில் அவதூறு: போலீஸில் அனசுயா பரத்வாஜ் புகார்
Updated on
1 min read

பிரபல தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ். புஷ்பா, புஷ்பா 2, மைக்கேல் உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர், சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், சிலர் தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்துப் பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களை உருவாக்கிப் பரப்புவதாகவும், தனது புகைப்படங்களைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மார்பிங் செய்வதும் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை உருவாக்கியும் வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதனடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார், 42 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் அவதூறு: போலீஸில் அனசுயா பரத்வாஜ் புகார்
‘தலைவர் தம்பி தலைமையில்’ வசன சர்ச்சை: ஜீவா விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in