சர்ச்சை பாடல் விவ​காரம்: நோரா ஃபதேஹிக்கு எதிராக புகார்

சர்ச்சை பாடல் விவ​காரம்: நோரா ஃபதேஹிக்கு எதிராக புகார்
Updated on
1 min read

கன்​னடத்​தில் உரு​வான ‘கே டி : தி டெவில்’ என்ற படம், இந்தி, தமிழ் உள்படபல்​வேறு மொழிகளில் ஏப்​.30-ல் வெளியாகிறது. இதில் துருவா சர்​ஜா, சஞ்​சய் தத், ஷில்பா ஷெட்​டி, ரமேஷ் அரவிந்த் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.‌ பிரேம் இயக்​கி​யுள்ள இப்​படத்தை கே.​வி.என் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்​ளது. இப்​படத்​திலிருந்து இந்​தி​யில் வெளி​யான குத்​துப்​பாடல் சர்ச்​சை​யில் சிக்​கியது. அப்​பாடலில் நோரா ஃபதேஹி, சஞ்​சய் தத் ஆடி​யிருந்​தனர்.

இதில், ஆபாச​மான வார்த்​தைகள் இருப்​ப​தாக கடும் கண்​டனங்​கள் எழுந்​ததை அடுத்து தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் தயாரிப்பு நிறு​வனத்​துக்கு நோட்​டீஸ் அனுப்​பியது. இதையடுத்து யூடியூப் தளத்​தில் இருந்து இப்​பாடல் நீக்​கப்​பட்​டது. இயக்​குநர் பிரேம், மன்​னிப்​புக்கேட்டு வீடியோ ஒன்றை வெளி​யிட்​டார்.

இதுபற்​றிய பேசிய கர்​நாடக பிலிம் சேம்​பர் தலை​வர் ஜெய​மாலா, “அந்த சர்ச்​சைப்​பாடல் குறித்து பேசுவதற்​காக பிரேம், தயாரிப்​பாளரை அழைத்​திருந்​தோம். இரு​வரும் கலந்​து​கொள்ள இயல​வில்​லை. அவர்​கள் தரப்​பில் பேசியவர்​கள், பாடல் வரி​கள் விரை​வில் மாற்​றப்​படும் என்று உறு​தி​யளித்​தனர். அந்​தப் பாடல் ஏற்​கெனவே பல்​வேறு தளங்​களி​லிருந்து நீக்​கப்​பட்​டு​விட்​டது” என்​றார்.

இதற்​கிடையே கனடாவைச் சேர்ந்த, நோரா ஃபதேஹி இந்​தி​யாவில் தங்​கிப் பணி​யாற்​று​வதற்​கான, பணி அனு​மதி தொடர்​பாகப் புதிய சட்​டச் சிக்​கல்​ எழுந்​துள்​ளது. இந்​தி​யா​வில் தங்​குவதற்​கான சலுகைகளை அவர் தவறாகப் பயன்​படுத்​தி​யதாகக் குற்​றம் சாட்​டி​யுள்ள வழக்​கறிஞர்​கள் குழு ஒன்​று, இது தொடர்​பாக உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு மத்​திய உள்​துறை அமைச்​சகத்​துக்​குக் கடிதம் எழு​தி​யுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. அவர் நடிகை மட்​டுமே, அவருக்​கும் பாடல் வரிக்​கும் தொடர்​பில்லை என்று அவருக்கு ஆதரவாகவும் கருத்​துகள் எழுந்​துள்​ளன.

சர்ச்சை பாடல் விவ​காரம்: நோரா ஃபதேஹிக்கு எதிராக புகார்
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in