

நிவின் பாலி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பெத்லேகேம் குடும்ப யூனிட்’ படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரிஸ் ஏ டி இயக்கத்தில், நிவின் பாலி – மமிதா பைஜு இணைந்து நடித்திருக்கும் படம் ‘பெத்லேகேம் குடும்ப யூனிட்’. ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ள நிவின் பாலியின் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்பு வெளியான ‘சர்வம் மாயா’ படமும் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்திருந்தது.
‘பெத்லேகேம் குடும்ப யூனிட்’ படத்தில் சுரேஷ் கிருஷ்ணா, பிந்து பனிகர், வினய் ஃபோர்ட், ரோஷன் ஷாநவாஸ், ஷ்யாம் மோகன், ஷமீர் கான், ஸ்ரீண்டா, பார்வதி அய்யப்படாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பாவனா ஸ்டூடியோஸ் பேனரின் கீழ் திலீஷ் போதன், ஃபஹத் ஃபாசில் மற்றும் சியாம் புஷ்கரன் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் டப் செய்து செப்டம்பர் 3-ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.