‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் ‘பாலன்’

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் ‘பாலன்’
Updated on
1 min read

ரூபாய் இருபது கோடி முதலீட்டில் தயாரான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் 2024இல் வெளியாகி இந்தியா முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. அந்தப் படத்தின் இயக்குநர் சிதம்பரம் எஸ்.பொதுவாள் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாலன்’ இந்தி, நான்கு தென்னிந்திய மொழிகளில் ஜூன் 19இல் வெளியாகிறது.

இந்தப் படத்துக்கான திரைக்கதையை ஜீத்து மாதவனுடன் இணைந்து சிதம்பரம் எழுதியிருக்கிறார். கடந்த மே மாதம் கான் படவிழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’ பிரிவில் பிரீமியராகத் திரையிடப்பட்டு, பாராட்டு களைப் பெற்ற இப்படத்தின் டிரைலரை சூர்யா, அஜய் தேவ்கன், நாக சைதன்யா, ராஜ் பி.ஷெட்டி ஆகிய திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

சந்து சலீம்குமார், கணபதி, ஃபர்சானா பலதிங்கள், சிறார் நடிகர் ஆதிசேஷன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் டொவினோ தாமஸ், ஜீன் பால் லால் சிறப்புத் தோற்றங்களில் வருகின்றனர்.

படம் குறித்து இயக்குநர் கூறும்போது: “நாம் நம்மை அறியாமலேயே சுமந்துகொண்டிருக்கும் மனச்சுமைகள், நாம் போய்ச்சேர வேண்டிய இடத்தை நோக்கிய ஒரு தாய், மகனின் தேடல் ஆகியவைதான் படம்.

உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாதவர்களுக்காகவே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்” என்கிறார். இப்படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ்‌, தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநரின் ‘பாலன்’
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in