ஆகஸ்ட்டில் இந்திய பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.1,768 கோடி - ‘டாப்’ படங்கள் எவை?

ஆகஸ்ட்டில் இந்திய பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.1,768 கோடி - ‘டாப்’ படங்கள் எவை?
Updated on: 
1 min read

கடந்த ஆகஸ்ட் மாதம் மட்​டும் இந்​திய பாக்ஸ் ஆபீஸ், ரூ.1,768 கோடி வசூலை ஈட்​டி​யுள்​ளது.

ஒவ்​வொரு மாத​மும் வெளி​யாகும் திரைப்​படங்​களுக்​குக் கிடைக்​கும் வரவேற்​பைப் பொறுத்து இந்​திய சினி​மா​வின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஏறி, இறங்​கு​வது வழக்​கம். அதன்​படி கடந்த ஆகஸ்ட் மாதம் மட்​டும் இந்​திய பாக்ஸ் ஆபீஸ், ரூ.1,768 கோடி வசூலை எட்​டி​யுள்​ளது. இந்த ஆண்​டில் இது​வரை இல்​லாத சிறந்த வசூலாக இது உரு​வெடுத்​துள்​ளது. அதோடு, இந்​திய பாக்ஸ் ஆபீஸ் வரலாற்​றில் 3-வது மிகச் சிறந்த மாத​மாக​வும் மாறி​யிருக்​கிறது.

ஆகஸ்ட் மாத பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடம் பிடித்​திருப்​பது ‘ஹனு​மன் அன்​ஸ்’. ஆன்​மிக குரு​வான நீம் கரோலி பாபா​வின் வாழ்க்கை மற்​றும் போதனை​களை அடிப்​படை​யாகக் கொண்டு விஷால் சதுர்​வேதி இயக்​கத்​தில் வெளி​யான ஆன்​மிகத் திரைப்​படம் இது. மிகக்​குறைந்த பட்​ஜெட்​டில் உரு​வான இந்த இந்தி திரைப்​படம் இப்​போது​வரை வசூல் வேட்டை நடத்தி வரு​கிறது.

அடுத்​து, யாஷின் டாக்​ஸிக், ரவிதேஜா​வின் இரு​முடி, நிவின் பாலி​யின் பெத்​ல​கேம் குடும்ப யூனிட், இந்தி திரைப்​பட​மான ஆவாரபன் 2 ஆகிய திரைப்​படங்​கள் ஆகஸ்ட் மாதம் அதிக வசூல் பங்​களிப்​பைச் செய்​துள்​ளன. இந்​நிலை​யில் அந்த மாதத்​தின் மொத்த வசூலாக ரூ.1,768 கோடி கிடைத்​துள்​ளது. இது, இந்த ஆண்​டின் மிகச்​சிறந்த மாத​மாக​வும், இந்​திய பாக்ஸ் ஆபீஸ் வரலாற்​றில் டிச. 2024, டிச. 2023-க்கு அடுத்​த​படி​யாக, 3-வது சிறந்த மாத​மாக​வும் திகழ்​கிறது.

இந்த ஆண்​டு, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை வெளி​யான படங்​களின் மொத்த வசூல் ரூ.9,868 கோடியை எட்​டி​யுள்​ளது. இது 2025-ம் ஆண்​டின் இதே காலக்​கட்​டத்தை விட 18 சதவி​கிதம் அதி​கம்.

ஆகஸ்ட்டில் இந்திய பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.1,768 கோடி - ‘டாப்’ படங்கள் எவை?
Belonging: நான் ‘நான்’ ஆக இருக்க இடம் இருக்கிறதா? | டீனதிகாரம் 4
ஆகஸ்ட்டில் இந்திய பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.1,768 கோடி - ‘டாப்’ படங்கள் எவை?
பத்தா: விமர்சனம் - இயல்பாய் ஈர்த்து மனிதம் பேசும் ஓர் அரிய படைப்பு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in