நடிகர் திலீப் விடு​தலையை எதிர்த்து மேல்​முறை​யீடு

நடிகர் திலீப் விடு​தலையை எதிர்த்து மேல்​முறை​யீடு
Updated on
1 min read

பிரபல மலை​யாள நடிகை ஒரு​வர் கடந்த 2017ம் ஆண்டு பாலியல் துன்​புறுத்​தலுக்கு ஆளா​னார். இவ்​வழக்​கில் நடிகை​யின் முன்னாள் கார் ஓட்​டுநர் பல்​சர் சுனில் உட்பட 7 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில் இச்சம்பவத்​துக்​குச் சதித்​ திட்​டம் தீட்​டிய​தாக மலை​யாள நடிகர் திலீப் கைது செய்​யப்​பட்​டார். 74 நாள் சிறை​வாசத்​துக்​குப் பிறகு திலீப், ஜாமீனில் வெளியே வந்​தார்.

கடந்த 8 ஆண்​டு​களாக நடந்து வந்த இவ்​வழக்​கில் இருந்து நடிகர் திலீப், கடந்த ஆண்டு டிசம்​பரில் விடு​தலை செய்​யப்​பட்​டார். வழக்கின் முதல் 6 குற்​ற​வாளி​களான பல்​சர் சுனி, மார்ட்​டின் ஆண்டனி, மணி​கண்​டன் பி, விஜயேஷ், சலீம், பிரதீப் ஆகியோருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்​நிலை​யில், நடிகர் திலீப் மற்​றும் பலர் விடுவிக்​கப்பட்​டதை எதிர்த்து கேரள உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​ முறையீட்டு மனுவை கேரள அரசு வெள்​ளிக்​கிழமை (பிப்​.27) தாக்​கல் செய்​துள்​ளது.

அதில், இவ்​வழக்​கில் குற்​ற​வாளி​கள் எனத் தீர்ப்​பளிக்​கப்​பட்டு 20 ஆண்டு சிறைத்​ தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளவர்​களின் தண்டனையை அதி​கரிக்​க​வும், வழக்​கி​ல் இருந்து நடிகர் திலீப், சார்லி தாமஸ், சனில் குமார், சரத் ஆகியோரை விடு​தலை செய்த உத்தரவை மறு ஆய்வு செய்​ய​வும் கோரப்​பட்​டுள்​ளது. இந்த மனு அடுத்த வாரம் விசா​ரணைக்கு வரும் என்று கூறப்​படு​கிறது.

நடிகர் திலீப் விடு​தலையை எதிர்த்து மேல்​முறை​யீடு
‘வடம்’ படத்​தில் 5 கதைகள் இருக்கும்: நடிகர் விமல் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in