

நடிகர் நிவின் பாலி அருகில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்து தமிழ், மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'நேரம்'. இப்படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து 'பிரேமம்' படத்தில் இருவரும் இணைந்தனர்.
இப்படத்தின் மெகா வெற்றி மூலம் இன்னும் பிரபலமானார் நிவின்பாலி. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்துக்காக இப்போது மீண்டும் இணைய உள்ளனர். நிவின் பாலியின் 50-வது திரைப்படமாக உருவாகும் இதை ஆல்பா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் தொடக்க விழா நாளை (ஜூன் 24-ம் தேதி) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஆகிய இருவருக்குமே தங்களின் முந்தைய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு, இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.