கின்னஸ் சாதனை படைத்த ‘ராக்கா’

கின்னஸ் சாதனை படைத்த ‘ராக்கா’
Updated on
1 min read

அட்லி இயக்​கத்​தில் அல்லு அர்​ஜுன் கதா​நாயக​னாக நடிக்​கும் சயின்ஸ் பிக் ஷன் படம் ‘ராக்​கா’. சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இப்​படத்​தின் கதை, 2 வெவ்​வேறு உலகங்​களி​லும் கால​கட்​டங்​களி​லும் நடப்​ப​தாக அமைக்​கப்​பட்​டுள்​ளது. தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்​கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்​குர், ராஷ்மிகா மந்​தனா உள்பட பலர் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

இப்​படத்​துக்​காக ஒரே நேரத்​தில் 37 நபர்​களைக் கொண்டு நிகழ்​நேர மோஷன் - கேப்​சர் தொழில்​நுட்​பம் மூலம் காட்​சிகள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. வழக்​க​மாக மோஷன் - கேப்​சர் தொழில்​நுட்​பத்​தில் சில நபர்​களை மட்​டுமே வைத்து ஒரே நேரத்​தில் படம் பிடித்​துள்ள நிலை​யில் ‘ராக்​கா’ படத்​தில் 37 பேரை ஒரே நேரத்​தில் இத்​தொழில்​நுட்​பத்​தில் படம் பிடித்​திருப்​பது உலக திரைப்பட வரலாற்​றில் சாதனை​யாகப் பார்க்​கப்​படு​கிறது.

இந்த சாதனை முயற்​சிக்​காக, 92 ஆப்​டிகல் மோஷன்​-கேப்​சர் கேம​ராக்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இந்த கின்​னஸ் சாதனைக்​கான அதி​காரப்​பூர்வ சான்​றிதழை அல்லு அர்​ஜுன் மற்​றும் இயக்​குநர் அட்லி இணைந்து பெற்​றுக் ​கொண்​டனர்.

கின்னஸ் சாதனை படைத்த ‘ராக்கா’
திரைத் தெறிப்புகள்: பி.சி.ஸ்ரீராம் ஆதங்கம் முதல் காஜல் அகர்வால் அட்வைஸ் வரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in