

நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது படத்தை அவரது அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தை, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கிய ரா.கார்த்திக் இயக்குகிறார். இந்தப் படத்தில் தபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இருவரும் 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். 1996ம் ஆண்டு இருவரும் நடித்து வெளியான ‘நின்னே பெல்லாடடா’ என்ற தெலுங்கு திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. கடைசியாக 1998-ல் வெளியான ‘ஆவிடா மா ஆவிடே’என்ற படத்தில் நடித்திருந்தனர்.
இப்போது மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. அதில் இணைந்துள்ளதை சமூக வலைதளப் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார் தபு.