மக்​களைத் தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை

மக்​களைத்  தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை
Updated on
1 min read

தமிழ், தெலுங்​கு, இந்​திப் படங்​களில் நடித்து வரு​கிறார், ரகுல் ப்ரீத் சிங். இவர் தனது உடலில் சில இடங்​களில் பிளாஸ்​டிக் சர்​ஜரி செய்துள்​ள​தாக டாக்​டர் பிர​சாந்த் என்​பவர், சில நாட்​களுக்கு முன் வெளி​யிட்ட வீடியோ​வில் தெரி​வித்​திருந்​தார். அதில், ரகுல் ப்ரீத் சிங்​கின் தற்​போதைய மற்​றும் முந்​தைய புகைப் ​படங்​களை வெளியிட்​டுள்​ளார்.

கன்​னம், தாடையை மேம்​படுத்த ரகுல் பிளாஸ்​டிக் சர்​ஜரி மற்​றும் ஃபில்​லர்​களைப் பயன்​படுத்​தி​ய​தாக​வும் மூக்கு அறுவை சிகிச்சையை​ செய்​து​கொண்​ட​தாக​வும் தெரி​வித்​திருந்​தார். இந்நிலை​யில், அந்த மருத்​து​வரை ரகுல் ப்ரீத் சிங் கடுமை​யாக விமர்​சித்து தனது இன்​ஸ்​டாகி​ராம் ஸ்டோரி​யில் பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார்.

அதில், “மோசடி எச்​சரிக்​கை: இவரைப் போன்​றவர்​கள் தங்​களை மருத்​து​வர்​கள் என்று கூறிக்​கொண்டு எந்த ஆதா​ர​மும் இல்​லாமல் அறிக்​கைகளை வெளி​யிடு​வதும் மக்​களைத் தவறாக வழிநடத்​து​வதும் அச்​சத்​தைத் தரு​கிறது. பழங்​கால மற்​றும் நவீன அறிவியலைப் புரிந்​து​கொண்ட ஒரு நடிகை​யாக இருக்​கிறேன்.

மக்​கள் அறுவை சிகிச்​சைகள் செய்​தால் அதில் எனக்கு எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. ஆனால் கடின உழைப்​பின் மூலம் எடையைக் குறைக்க முடி​யும் என்ற மற்​றொரு விஷய​மும் இருக்கிறது. அதைப் பற்றி எப்​போ​தாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்​டுள்​ளார்.

மக்​களைத்  தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை
அழகும் நளினமும்... நடிகை நேஹா ஷெட்டி க்ளிக்ஸ்!
மக்​களைத்  தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை
புன்னகை பூ... நடிகை ஸ்ரீலீலா க்ளிக்ஸ் அணிவகுப்பு!
மக்​களைத்  தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை
மஞ்சள் மலர்... நடிகை சான்வே மேகனா க்ளிக்ஸ்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in