

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். ‘மேயாத மான்’ படம் மூலம் அறிமுகமான அவர், ‘கடைக் குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘யானை’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘டிமான்டி காலனி 2’, ‘பிளாக்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் நடித்து வரும் அவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், தெலுங்கில் ரவிதேஜா ஹீரோவாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை சிவா நிர்வாணா இயக்குகிறார். இவர் இதற்கு முன் நின்னுகோரி, மஜ்லி, குஷி ஆகிய படங்களை இயக்கியவர். இவர் இப்போது க்ரைம் த்ரில்லர் கதையை இயக்குகிறார்.
இதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். அஜனிஷ் லோகேஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. பீமா, ஜீப்ரா ஆகிய தெலுங்கு படங்களில் பிரியா பவானி சங்கர் ஏற்கெனவே நடித்துள்ளார்.