

நடிகை நிவேதா பெத்துராஜ்
பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ என்ற படம் கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது.
இதில் நடிகை நிவேதா பெத்துராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் பேசிய நிவேதா பெத்துராஜ், திரைத் துறையில் இருந்து விலக முடிவு செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கடந்த 2023ம் ஆண்டில், திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகிவிடலாம் என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் எனக்குத் திரைத்துறையின் மீது ஒருவித வெறுப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் எடுக்கும் தவறான முடிவுகளும், நாம் செல்லும் சில தவறான பாதைகளும் கூட, இறுதியில் நம்மை நல்ல இடத்துக்குக் கொண்டு சேர்க்கும் என்பதை இப்போது உணர்கிறேன்.
அப்படி நான் கடந்த பாதைகள் தான், இன்று சிங் கீதம் சீனிவாசராவ் போன்ற மாபெரும் ஜாம்பவான் இயக்குநரின் பிளாக் பஸ்டர் திரைப்படத்தில் என்னை சேர்த்திருக்கிறது. இதற்கு இப்படத்தின் தயாரிப்பாளர் நாக் அஸ்வினுக்கு நன்றி. இதற்காக பெரு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.