நடிகை கடத்​தப்​பட்ட வழக்​கு: டிச.8-ம் தேதி தீர்ப்பு

நடிகர் திலீப்

நடிகர் திலீப்

Updated on
1 min read

பிரபல மலை​யாள நடிகை ஒரு​வர், கடந்த 2017-ம் ஆண்டு பிப்​.17-ம் தேதி, திருச்​சூரிலிருந்து கொச்​சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்​போது காரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்​பலால் நடிகை கடத்​தப்​பட்​டு, பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்ளா​னார். அந்​தக் கும்​பல் தங்​கள் செல்​போனில் அதை வீடியோ​வாக எடுத்​த​பின், நடிகையை வழி​யில் இறக்​கி​விட்​டுத் தப்பியது.

இதுகுறித்து அந்த நடிகை கொச்சி போலீ​ஸில் புகார் செய்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்​தனர். இந்த வழக்​கில் பல்​சர் சுனில்​கு​மார் என்​பவரைக் கைது செய்​தனர். பின்​னர் மார்ட்​டின் ஆண்​டனி, மணி​கண்​டன், விஜீஷ் உள்பட 8 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில் இச்சம்பவத்​துக்​கு மலை​யாள முன்​னணி நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்​டி​னார் என தெரிய​வந்​தது.

இதைத்​தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்​யப்​பட்ட திலீப், 85 நாள் சிறை​வாசத்​துக்​குப் பின் ஜாமீனில் வெளியே வந்​தார். கடந்த 2018-ம் ஆண்டு இந்த வழக்​கில் விசா​ரணை தொடங்கியது. மொத்​தம் 216 சாட்​சிகள் விசா​ரிக்​கப்​பட்​டனர்.

இவ்​வழக்கு கடந்த ஏப்​ரல் மாதம் நிறைவடைந்​தது. இந்​நிலை​யில் டிச. 8-ம் தேதி தீர்ப்பு வழங்​கப்​படும் என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹனி எம். வர்​கீஸ் அறி​வித்​துள்​ளார். நடிகர் திலீப் உள்பட 9 பேரும் நீதி​மன்​றத்​தில் அன்று ஆஜராக வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டுள்​ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in