

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் அனுஷ்காஷெட்டியின் திருமணம் பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.
இவர் நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாகி வந்தன. இதை இருவருமே மறுத்தனர். பின்னர் தெலுங்கு இயக்குநர் ஒருவரை அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. அதையும் அவர் மறுத்திருந்தார்.
இந்நிலையில் இப்போது பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் அவருக்குத் திருமணம் நடக்க இருப்பதாகவும் அவர் அனுஷ்காவின் தூரத்து உறவினர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அனுஷ்கா தரப்பில் இதை உறுதிப்படுத்தவில்லை.