

ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தை புச்சி பாபு சானா இயக்குகிறார். இதில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார்.
கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யந்து ஷர்மா, போமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ்கிலாரு தயாரிக்கும் இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்துக்காக ஆக் ஷன் காட்சி படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ராம் சரணுக்கு கண் அருகே காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனை சென்ற அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
“அவருக்கு ஏற்பட்டது லேசான காயம்தான்; விரைவில் குணமடைந்து படப்பிடிப்பில் பங்கேற்பார்” என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆக் ஷன் காட்சியை அடுத்து பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட இருக்கிறது. அப்பாடலில் மிருணாள் தாக்குர் நடிக்க இருக்கிறார்.