ஆளுமை உரிமை வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு ஜூனியர் என்.டி.ஆர் நன்றி

ஆளுமை உரிமை வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு ஜூனியர் என்.டி.ஆர் நன்றி
Updated on
1 min read

தங்​களு​டைய ஆளுமை உரிமை​களைப் பாது​காக்​கக் கோரி சமீப​கால​மாக திரை பிரபலங்​கள் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடுத்து வரு​கின்​றனர்.

அமி​தாப் பச்​சன், ஐஸ்​வர்யா ராய், ஹிருத்​திக் ரோஷன், நாகார்​ஜு​னா, சிரஞ்​சீ​வி, ஷில்பா ஷெட்டி உள்பட பலர் இது தொடர்​பாக வழக்​குத் தொடுத்து தடை உத்​தரவு பெற்​றுள்​ளனர். இந்​நிலை​யில் நடிகர் ஜூனியர் என்​.டி.ஆரும் டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

சமூக ஊடக தளங்​கள், மின் வணிக வலைத்​தளங்​களில் தனது பெயர்​, புகைப்​படங்​கள், வீடியோக்​களை அனு​ம​தி​யின்​றி பயன்படுத்​து​வது தனது தனிப்​பட்ட உரிமை​களை மீறு​வ​தாகும் என்று தெரி​வித்​திருந்​தார். வழக்கை விசா​ரித்த உயர்​நீ​தி​மன்​றம் ஜுனியர் என்​.டி.ஆருக்கு ஆதர​வாகத் தீர்ப்​பளித்​துள்​ளது.

இதையடுத்து டெல்லி உயர் நீதி​மன்​றத்​துக்கு நன்றி தெரிவித்துள்ள ஜுனியர் என்​.டி.ஆர், இன்​றைய டிஜிட்​டல் யுகத்தில் எனது தனிப்​பட்ட உரிமை​களைப் பாது​காக்க உத்​தரவு வழங்​கியதற்கு நன்றி என்று கூறி​யுள்​ளார்.

ஆளுமை உரிமை வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு ஜூனியர் என்.டி.ஆர் நன்றி
திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி மீது கொடூரத் தாக்குதல்: எஸ்டிபிஐ கடும் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in