“இப்போதும் எனக்கு கூகுள் பே பயன்​படுத்​தத் தெரி​யாது” - நடிகர் இந்திரன்ஸ் தகவல்

“இப்போதும் எனக்கு கூகுள் பே பயன்​படுத்​தத் தெரி​யாது” - நடிகர் இந்திரன்ஸ் தகவல்
Updated on
1 min read

பிரபல மலை​யாள குணச்சித்​திர நடிக​ரான இந்​திரன்ஸ் தமிழில், ‘கருப்​பு’ படத்​தில் முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடித்​திருந்​தார்.

அடுத்​து, ராஜ்கு​மார் பெரிய​சாமி இயக்​கத்​தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்​கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்​டி​யில், தனக்கு ஆரம்​பத்​தில் ஸ்மார்ட்போன் பயன்​படுத்​து​வ​தில் துளி​யும் விருப்​பம் இல்லை என்று தெரிவித்துள்​ளார்.

“எனக்கு ஸ்மார்ட் ​போன் வாங்​கு​வ​தில் ஆர்​வம் இல்​லை. ஆனால், மம்​மூட்டி தான் கட்​டாயப்​படுத்தி அதை வாங்க வைத்​தார். ‘இனிமேல் உன்​னிடம் பேச வேண்​டும் என்​றால் ஸ்மார்ட்​போன் இருந்​தால் மட்​டுமே முடி​யும்’ என்று அவர் அன்​போடு கட்டளையிட்டார். அவரது வற்​புறுத்​தலுக்​குப் பிறகே முதன்முதலில் அதைப் பயன்​படுத்​தத் தொடங்​கினேன்.

ஸ்மார்ட்​போன் வைத்​திருந்​தா​லும், கூகுள் பே உள்​ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்​புவது எப்​படி என்று இன்​னும் தெரியாது. பேஸ்​புக் உள்​ளிட்ட சமூக ஊடக கணக்​கு​களை நண்பர்கள் மற்றும் பிறரின் உதவி​யுடனேயே பார்த்​து வருகிறேன்” என்று அவர் தெரிவித்​தார்.

“இப்போதும் எனக்கு கூகுள் பே பயன்​படுத்​தத் தெரி​யாது” - நடிகர் இந்திரன்ஸ் தகவல்
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in