பிரபாஸ் படத்தில் வில்லனாகும் கமல்ஹாசன்? 

பிரபாஸ் படத்தில் வில்லனாகும் கமல்ஹாசன்? 
Updated on
1 min read

ஹைதராபாத்: பிரபாஸ், அமிதாப் பச்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ‘புராஜெக்ட் கே’ படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனினும் இதுவரை கமல் தரப்பிலிருந்து எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட்டால் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in