

ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படம் அக்டோபர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரவி தேஜா நடிக்கும் புதிய படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’. காயத்ரி பரத்வாஜ், நூபுர் சனோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
வம்சி இயக்கும் இப்படத்திற்கு ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படம் ரவி தேஜாவின் கரியரிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமாக அமைந்துள்ளது. படம் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பார்வையை படக்குழு வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில், கதை 70களில் நடப்பதாக விவரிக்கப்படுகிறது. ‘இந்தியாவின் குற்றங்களின் தலைநகரம் ஸ்டுவர்ட் புரம். அந்த இடத்துக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது டைகர் ஜோன்” என பின்னணியில் குரல் ஒலிக்க இறுதியாக, ‘மான்களை வேட்டையாடும் புலிகள பாத்துருப்ப, புலிகள வேட்டையாட்ற புலிய பாத்துருக்கியா’ என டையலாக்குடன் ரவிதேஜா காட்டப்படுகிறார். ரவிதேஜாவின் ரசிகர்களுக்கு படத்தின் முதல் தோற்றம் ட்ரீட்டாக அமைந்துள்ளது.