“ஆர்ஆர்ஆர் படத்தை பார்க்கவில்லை” - பிரியங்கா சோப்ராவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

“ஆர்ஆர்ஆர் படத்தை பார்க்கவில்லை” - பிரியங்கா சோப்ராவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Updated on
1 min read

“‘ஆர்ஆர்ஆர்’ படத்தை நான் பார்க்கவில்லை” என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்ததையடுத்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை பிரியங்கா சோப்ராவிடம், “ராம்சரண் இந்தியில் அறிமுகமான ‘சன்ஜீர் (Zanjeer) படத்தில் அவருடன் இணைந்து நீங்கள் நடித்தீர்கள். அந்த வகையில் அவரின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை பார்த்தீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரியங்கா, “இல்லை” என பதிலளித்தார். தொடர்ந்து அவர், “எனக்கு நேரம் கிடைப்பதில்லை. நான் நிறைய திரைப்படங்களையெல்லாம் பார்ப்பதில்லை. ஆனால், நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன்” என பதிலளித்துள்ளார்.

மேலும், “நடிகர் ராம் சரண் 'இந்தியாவின் பிராட் பிட்' என்று அழைக்கப்படுவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா” என்று அவரிடம் கேட்கப்பட்டது, அவர் 'ஆம் கண்டிப்பாக' என்றார்.

இதனிடையே ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இன்னும் பார்க்கவில்லை என கூறிய பிரியங்கா சோப்ராவை ரசிகர்கள் ட்ரால் செய்து வருகின்றனர். காரணம், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் திரையிடப்பட்டபோது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பிரியங்கா சோப்ரா. அப்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குறைந்தபட்சம் இந்திய திரைப்பட பயணத்தில் என்னுடைய பங்களிப்பு இருந்தது மகிழ்ச்சி. ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்திருந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் ‘ஆர்ஆர்ஆர்’ ஒரு தமிழ்ப்படம் என்று அவர் கூறியிருந்தத்தையும் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in