துல்கர் சல்மானை இயக்கும் வாத்தி இயக்குநர்

துல்கர் சல்மானை இயக்கும் வாத்தி இயக்குநர்
Updated on
1 min read

தனுஷ், சம்யுக்தா நடித்த ‘வாத்தி’ படத்தை இயக்கியவர், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி.

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவானது. இதை அடுத்து, துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், பார்ச்சூன் ஃபோர் சினிமா நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் குழுவினர் இன்னும் முடிவாகவில்லை. அக்டோபரில் இதன் படப்பிடிப்புத் தொடங்குகிறது. அடுத்த வருட கோடையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in