ரூ.60 கோடியை வசூலித்து மலையாளத்தில் ‘மாஸ்’ காட்டும் டோவினோ தாமஸின் ‘2018’ 

ரூ.60 கோடியை வசூலித்து மலையாளத்தில் ‘மாஸ்’ காட்டும் டோவினோ தாமஸின் ‘2018’ 
Updated on
1 min read

மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘2018’ திரைப்படம் முதல் வார முடிவில் ரூ.60 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூட் அந்தனி ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘2018’ பாக்ஸ் ஆஃபீஸிலும் ‘மாஸ்’ காட்டி வருகிறது. இன்றும் கேரளாவில் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படம் வெளியாகி 1 வாரம் கடந்துள்ள நிலையில் ரூ.60 கோடியைத்தாண்டி படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 3 மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in