ஜூனில் தொடங்கும் ‘காந்தாரா 2’!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம், ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. பான் இந்தியா முறையில் 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in