Published : 09 May 2023 07:44 PM
Last Updated : 09 May 2023 07:44 PM

ஜப்பானில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ள ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ 

ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஜப்பானில் உள்ள திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. மேலும் படம் ரூ.119 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்திருந்த இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. உலக அளவில் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்த நிலையில், ஜப்பானில் மட்டும் படம் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

ஜப்பானின் 44 நகரங்களில் உள்ள 209 திரைகளில் படம் வெளியிடப்பட்டது. இதில் 31 ஐமேக்ஸ் திரைகள். மேலும் படம் ஜப்பானில் ரூ.119 கோடியை வசூலித்து அந்நாட்டில் அதிகம் வசூலித்த இந்தியப்படம் என்ற பெருமையையும் ‘ஆர்ஆர்ஆர்’ பெற்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு முன் வெளியான ரஜினியின் ‘முத்து’ திரைப்படம் தான் ஜப்பானில் அதிக வசூலை ஈட்டிய இந்தியத்திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருந்தது. கடந்தாண்டு டிசம்பர் மாதமே ‘முத்து’ படத்தின் சாதனையை முறியடித்து ‘ஆர்ஆர்ஆர்’ அந்த இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x