'விரூபாக்‌ஷாவில் நடிக்க ரஜினிதான் காரணம்' - சாய் தரம் தேஜ் தகவல்

சாய் தரம் தேஜ்
சாய் தரம் தேஜ்
Updated on
1 min read

நடிகர் சிரஞ்சீவியின் மருமகனும் நடிகருமான சாய் தரம் தேஜ் நடித்துள்ள படம், 'விரூபாக்ஷா'. தெலுங்கில் வெளியான இந்தப் படம், தமிழ், இந்தி, மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டு வரும் 5ம் தேதி வெளியாகிறது. கார்த்திக் வர்மா இயக்கியுள்ள இதில் சம்யுக்தா மேனன், சுனில், பிரம்மாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். 'காந்தாரா' அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது.

இந்தப் படம் பற்றிய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சாய் தரம் தேஜ் கூறும்போது, “நான் சென்னையில் படித்தவன்தான். தெலுங்கில் பல படங்களில் நடித்து வெற்றி பெற்றிருந்தாலும் தமிழில் நாயகனாக வெற்றி பெற நினைத்திருந்தேன். இந்தப் படம் மூலம் அந்தக் கனவு நிறைவேறி இருக்கிறது. இது தெலுங்கில் இன்னும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் நடிக்க ரஜினி சார்தான் இன்ஸ்பிரேஷன். அவர் நடித்த 'சந்திரமுகி' படத்தில் நாயகிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். அதே போல் இந்தப் படத்திலும் நாயகிக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு வித்தியாசமான கதையும், சுகுமாரின் விறு
விறுப்பான திரைக்கதையும் காரணம்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் பி.வி. எஸ்.என்.பிரசாத் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in