மூத்த மலையாள நடிகர் மாமுக்கோயா மருத்துவமனையில் அனுமதி

மூத்த மலையாள நடிகர் மாமுக்கோயா மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

மலையாள சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகர் மாமுக்கோயா (Mamukkoya) சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மாமுக்கோயா நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர் காமெடி நடிகராக பிரபலமடைந்தார். 450 படங்களுக்கு மேல் நடித்துள்ள மாமுக்கோயா இரண்டு முறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் 76 வயதான அவர் பூங்கோடு ஜானகிய செவன்ஸ் ஃபுட்பால் டோர்னமென்ட் (Poongod Janakeeya Sevens Football Tournament) போட்டியை தொடங்கி வைப்பதற்காக மலப்புரம் வந்திருந்தார். அப்போது பெரும் கூட்டம் ஒன்று செல்ஃபி எடுப்பதற்காக அவரை சூழ்ந்தது. தான் அசௌகரியமாக உணர்வதாக அவர் கூறியிருந்ததோடு, கால்பந்து மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூவில் இருக்கும் அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in