பிக்பாஸ் தெலுங்கு வெற்றியாளர் சிவபாலாஜி

பிக்பாஸ் தெலுங்கு வெற்றியாளர் சிவபாலாஜி
Updated on
1 min read

பிக்பாஸ் தெலுங்கு ரியாலிட்டி  ஷோவின்  வெற்றியாளராக நடிகர் சிவ பாலாஜி  தேர்ந்தெடுக்கப்பட்டார்

ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி  தெலுங்கு மற்றும் தமிழில் இந்த வருடம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு பார்வையாளர்களிடன் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை, தெலுங்கின் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். ஸ்டார் மா  சேனல் ஒளிப்பரப்பு செய்து வந்தது

 இந்த  நிலையில் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் தெலுங்கு மற்றும் சில தமிழ் படங்களில் நடித்துள்ள சிவ பாலாஜி வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றுமொரு போட்டியாளரான ஆதர்ஷுடன் நிலவிய கடும் போட்டியில்  சிவ பாலஜி வெற்றி பெற்றிருக்கிறார்.

வெற்றி பெற்ற சிவ பாலஜிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

சிவ பாலாஜி தமிழில் இங்கிலிஷ்காரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in