வெளிநாட்டு ஸ்டன்ட் குழுவுடன் ‘அல்லு அர்ஜுன்’ மோதல்

'புஷ்பா 2' படத்தில் அல்லு அர்ஜுன்
'புஷ்பா 2' படத்தில் அல்லு அர்ஜுன்
Updated on
1 min read

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த படம், ‘புஷ்பா’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்தப் படம் 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் கான்செப்ட் டீசர் வரவேற்பைப் பெற்றது. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இதன் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு மலேசியா, இலங்கையில் உள்ள காடுகளில் நடக்க இருக்கிறது. வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்களுடன் அல்லு அர்ஜுன் மோதும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருக்கின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in