'கணவர் இழுத்து சென்றது ஏன்?' - சனா கான் விளக்கம்

நடிகை சனா கான்
நடிகை சனா கான்
Updated on
1 min read

தமிழில், சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு உட்பட சில படங்களில் நடித்தவர் சனா கான். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் மேலும் புகழ்பெற்ற சனா கான், கடந்த 2020ம் ஆண்டு, குஜராத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் முப்தி அனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது தாய்மை அடைந்துள்ள அவர் கணவருடன் இப்தார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு அவரை, கணவர் வேகமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதைக் கண்ட ரசிகர்கள், தாய்மை அடைந்துள்ள பெண்ணை இப்படி இழுத்துச் செல்வது முறையா? எனக் கேட்டிருந்தனர். இதற்கு சனாகான் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இப்போதுதான் இந்த வீடியோ என் கவனத்துக்கு வந்தது. எங்கள் கார் ஓட்டுநரை உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கு வியர்த்துக் கொட்டியதால், என் கணவர் விரைவாக காருக்கு அழைத்துச் சென்றார். மற்றபடி அதை தவறாக நினைக்க வேண்டாம். என் மீது காட்டிய அக்கறைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in