IPL 2023 | பெங்களூருவில் CSK vs RCB போட்டியைப் பார்த்த தனுஷ்!

போட்டியை பார்த்த தனுஷ் மற்றும் சிவ ராஜ்குமார்
போட்டியை பார்த்த தனுஷ் மற்றும் சிவ ராஜ்குமார்
Updated on
1 min read

பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியை நடிகர் தனுஷ் பார்த்திருந்தார். இந்தப் போட்டி பெங்களூரு மாநகரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

நடிகர் தனுஷ் உடன் கன்னட நடிகர் சிவ ராஜ்குமாரும் போட்டியை பார்த்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் சிவ ராஜ்குமாரும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்தது. 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பெங்களூரு விரட்டியது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in